(1)
உற்றுமை சேர்வது மெய்யினையே, உணர்வது நின்னருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே, கனல்விழி காய்வது காமனையே
அற்ற மறைப்பதும் உன்பணியே, அமரர்கள் செய்வதும் உன்பணியே
பெற்று முகந்தது கந்தனையே, பிரமபுரத்தை உகந்தனையே
(2)
சதிமிக வந்த சலந்தரனே, தடிசிர நேர்கொள் சலந்தரனே
அதிரொளி சேர் திகிரிப்படையால், அமர்ந்தனர் உம்பர் துதிப்படையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே, மருவு விடம் ஏற்பது கைச்சிலையே
விதியினில் இட்ட இரும் பரனே, வேணுபுரத்தை விரும்பரனே
(3)
காதமரத் திகழ் தோடினனே, கானவனாய்க் கடிது ஓடினனே
பாதமதால் கூற்றுதைத்தனனே, பார்த்தன் உடலம்பு தைத்தனனே
தாதவிழ் கொன்றை தரித்தனனே, சார்ந்த வினையதரித்தனனே
போதம் அமரும் உரைப் பொருளே, புகலி அமர்ந்த பரம்பொருளே
(4)
மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே, மகிழ்ந்தரை சேர்வது மாசுணமே
மெய்த்துடல் பூசுவர் மேல் மதியே, வேதமதோதுவர் மேல் மதியே
பொய்த்தலை ஓடுறு மத்தமதே, புரிசடை வைத்தது மத்தமதே
வித்தகராகிய எங்குருவே, விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே
(5)
உடன் பயில்கின்றனன் மாதவனே, உறுபொறி காய்ந்திசை மாதவனே
திடம்பட மாமறை கண்டனனே, திரிகுண மேவிய கண்டனனே
படங்கொள் அரவரை செய்தனனே, பகடுரி கொண்டரை செய்தனனே
தொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே, தோணிபுரத்துறை நம் சிவனே
(6)
திகழ் கையதும் புகைதங்கழலே, தேவர் தொழுவதும் தங்கழலே
இகழ்பவர் தாமொரு மான் இடமே, இருந்தனுவோடெழில் மானிடமே
மிகவரு நீர்கொளும் அஞ்சடையே, மின் நிகர்கின்றது அஞ்சடையே
தக விரதம் கொள்வர் சுந்தரரே, தக்க தராய்உறை சுந்தரரே
(7)
ஓர்வரு கண்கள் இணைக்க அயலே, உமையவள் கண்கள் இணைக் கயலே
ஏர்மருவும் கழல் நாகமதே, எழில்கொள் உதாசனன் ஆகமதே
நீர்வரு கொந்தளகம் கையதே, நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோக தியம்பகனே, சிரபுர மேய திஅம்பகனே
(8)
ஈண்டு துயிலமர் அப்பினனே, இருங்கண் இடந்தடி அப்பினனே
தீண்டலரும் பரிசு அக்கரமே, திகழ்ந்தொளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகைத் தலையே, மிகைத்தவரோடு நகைத்தலையே
பூண்டனர் சேரலும் மா பதியே, புறவம் அமர்ந்த உமாபதியே
(9)
நின் மணிவாயது நீழலையே, நேசமதானவர் நீழலையே
உன்னி மனத்தெழு சங்கமதே, ஒளி அதனோடுறு சங்கமதே
கன்னியரைக் கவரும் களனே, கடல் விடமுண்ட கருங்களனே
மன்னிவரைப் பதி சண்பையதே, வாரி வயல்மலி சண்பையதே
(10)
இலங்கை அரக்கர் தமக்கிறையே, இடந்து கயிலையெடுக்க இறையே
புலன்கள்கெட உடன் பாடினனே, பொறிகள் கெட உடன்பாடினனே
இலங்கிய மேனி இராவணனே, எய்து பெயரும் இராவணனே
கலந்தருள் பெற்றது மா வசியே, காழி அரனடி மாவசியே
(11)
கண்நிகழ் புண்டரிகத்தினனே, கலந்திரி புண்டரிகத்தினனே
மண்நிகழும் பரிசேனமதே, வானகம் ஏய்வகை சேனமதே
நண்ணி அடிமுடி எய்தலரே, நளிர்மலி சோலையில் எய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே, பசுமிக ஊர்வர் பசுபதியே
(12)
பருமதில் மதுரைமன் அவைஎதிரே, பதிகம் அதெழுதிலை அவைஎதிரே
வருநதி இடைமிசை வரு கரனே, வசையொடலர் கெட அருகரனே
கருதலில் இசைமுரல் தரு மருளே, கழுமலம் அமர்இறை தரும்அருளே
மருவிய தமிழ்விரகன் மொழியே, வல்லவர் தம்இடர் திடம் ஒழியே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...