திருக்கோளிலி – சுந்தரர் தேவாரம்:

<– திருக்கோளிலி

(1)
நீள நினைந்தடியேன் உனை நித்தலுந் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே
(2)
வண்டமருங் குழலாள் உமைநங்கை ஓர் பங்குடையாய்
விண்டவர்தம் புரமூன்றெரி செய்த எம் வேதியனே
தெண்திரை நீர்வயல்சூழ் திருக்கோளிலி எம்பெருமான்
அண்டமதாயவனே அவை அட்டித் தரப்பணியே
(3)
பாதிஓர் பெண்ணை வைத்தாய், படருஞ் சடைக் கங்கை வைத்தாய்
மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதியன்றே
கோதில் பொழில் புடைசூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
ஆதியே அற்புதனே அவை அட்டித் தரப்பணியே
(4)
சொல்லுவதென் உனைநான் தொண்டைவாய் உமைநங்கையை நீ
புல்கி இடத்தில் வைத்தாய்க்கொரு பூசல் செய்தார் உளரோ
கொல்லை வளம்புறவில் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
அல்லல் களைந்தடியேற்கவை அட்டித் தரப்பணியே
(5)
முல்லை முறுவல்உமை ஒரு பங்குடை முக்கணனே
பல்லயர் வெண்தலையில் பலிகொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புறவில் திருக்கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடியேற்கவை அட்டித் தரப்பணியே
(6)
குரவமருங் குழலாள் உமைநங்கை ஓர் பங்குடையாய்
பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதியன்றே
குரவமரும் பொழில்சூழ் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
அரவம் அசைத்தவனே அவை அட்டித் தரப்பணியே
(7)
எம்பெருமான் உனையே நினைந்தேத்துவன் எப்பொழுதும்
வம்பமருங் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகைசூழ் திருக்கோளிலி எம்பெருமான்
அன்பது வாய் அடியேற்கவை அட்டித் தரப்பணியே
(8)
அரக்கன் முடிகரங்கள் அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்
பரக்கும் அரவல்குலாள் பரவைஅவள் வாடுகின்றாள்
குரக்கினங்கள் குதிகொள் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
இரக்கமதாய் அடியேற்கவை அட்டித் தரப்பணியே
(9)
பண்டைய மால்பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும்
கண்டிலராய் அவர்கள் கழல் காண்பரிதாய பிரான்
தெண்திரை நீர்வயல்சூழ் திருக்கோளிலி எம்பெருமான்
அண்டமதாயவனே அவை அட்டித் தரப்பணியே
(10)
கொல்லை வளம்புறவில் திருக்கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பரவும் திருநாவலவூரன் அவன்
நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந்தேத்திய பத்தும் வல்லார்
அல்லல் களைந்துலகில் அண்டர் வானுலகு ஆள்பவரே

1 comment

  1. Paadal varigal clear ah padikura vidhama nalla irukku aana varigaloda vilakkam illathathu than konjam kastama irukku varigal irundha innum konjam padikka easy ah irukkum

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page