அகத்தியான்பள்ளி:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
வாடிய வெண்தலை மாலைசூடி, மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெருமான், அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே
(2)
துன்னம்கொண்ட உடையான், துதைந்த வெண்ணீற்றினான்
மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான், மாநகர்
அன்னம்தங்கு பொழில்சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னம் செய்த மனத்தார்கள் தம் வினையோடுமே
(3)
உடுத்ததுவும் புலித்தோல், பலி திரிந்துண்பதும்
கடுத்துவந்த கழற்காலன் தன்னையும் காலினால்
அடுத்ததுவும், பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகளாகவே
(4)
காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக் கண்ணினால்
பாய்ந்ததுவும் கழற்காலனைப், பண்ணினால் மறை
ஆய்ந்ததுவும், பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவும் இமவான் மகளொரு பாகமே
(5)
போர்த்ததுவும் கரியின் உரிபுலித் தோலுடை
கூர்த்ததோர் வெண்மழுவேந்திக் கோளரவம் அரைக்கு
ஆர்த்ததுவும், பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும் அரணம் படர்எரி மூழ்கவே
(6)
தெரிந்ததுவும் கணையொன்று முப்புரம் சென்றுடன்
எரிந்ததுவும், முன்எழிலார் மலர்உறைவான் தலை
அரிந்ததுவும், பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
புரிந்ததுவும் உமையாளொர் பாகம் புனைதலே
(7)
ஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண்பொருளாகி, மெய்ச்
சோதியென்று தொழுவாரவர் துயர் தீர்த்திடும்
ஆதி, எங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை
நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே
(8)
செறுத்ததுவும் தக்கன் வேள்வியைத், திருந்தார்புரம்
ஒறுத்ததுவும், ஒளிமாமலர் உறைவான் சிரம்
அறுத்ததுவும், பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன் தன் தோள்கள் இருபதே
(9)
சிரமும்நல்ல மதிமத்தமும் திகழ் கொன்றையும்
அரவுமல்கும் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே
(10)
செந்துவர் ஆடையினாரும், வெற்றரையே திரி
புந்தியிலார்களும் பேசும் பேச்சவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள்பிரான் அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின் நும் வினையானவை சிதைந்தோடுமே
(11)
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன், மாமயில்
ஆலும்சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள்
சூல நல்ல படையான் அடிதொழுதேத்திய
மாலைவல்லார் அவர்தங்கள் மேல்வினை மாயுமே

 

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (48):

<– சீகாழி

(1)
கறையணி வேலிலர் போலும், கபாலம் தரித்திலர் போலும்
மறையும் நவின்றிலர் போலும், மாசுணம் ஆர்த்திலர் போலும்
பறையும் கரத்திலர் போலும், பாசம் பிடித்திலர் போலும்
பிறையும் சடைக்கிலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே
(2)
கூரம்பது விலர் போலும், கொக்கின் இறகிலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலும், ஆமை அணிந்திலர் போலும்
தாரும் சடைக்கிலர் போலும், சண்டிக்கருளிலர் போலும்
பேரும் பலவிலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே
(3)
சித்த வடிவிலர் போலும், தேசம் திரிந்திலர் போலும்
கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்
மெய்த்த நயனம் இடந்தார்க்காழி அளித்திலர் போலும்
பித்த வடிவிலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே
(4)
நச்சரவாட்டிலர் போலும், நஞ்ச மிடற்றிலர் போலும்
கச்சுத் தரித்திலர் போலும், கங்கை தரித்திலர் போலும்
மொய்ச்சவன் பேயிலர் போலும், முப்புரம் எய்திலர் போலும்
பிச்சை இரந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே
(5)
தோடு செவிக்கிலர் போலும், சூலம் பிடித்திலர் போலும்
ஆடு தடக்கை வலிய யானை உரித்திலர் போலும்
ஓடு கரத்திலர் போலும், ஒள்ளழல் கையிலர் போலும்
பீடு மிகுத்தெழு செல்வப் பிரமபுரம் அமர்ந்தாரே
(6)
விண்ணவர் கண்டிலர் போலும், வேள்வி அழித்திலர் போலும்
அண்ணல் அயன்தலை வீழ அன்றும் அறுத்திலர் போலும்
வண்ணம் எலும்பினொடக்கு வடங்கள் தரித்திலர் போலும்
பெண்ணின மொய்த்தெழு பிரமபுரம் அமர்ந்தாரே
(7)
பன்றியின் கொம்பிலர் போலும், பார்த்தற்கருளிலர் போலும்
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலும்
துன்று பிணஞ்சுடு காட்டில் ஆடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே
(8)
பரசு தரித்திலர் போலும், படுதலை பூண்டிலர் போலும்
அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும்
புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும்
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே
(9)
அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் போலும்
கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும்
படிமலர்ப் பாலனுக்காகப் பாற்கடல் ஈந்திலர் போலும்
பிடிநடை மாதர் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே
(10)
வெற்றரைச் சீவரத்தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும்
அற்றவர் ஆனிழல் நால்வர்க்கறங்கள் உரைத்திலர் போலும்
உற்றலர் ஒன்றிலர் போலும் ஓடு முடிக்கிலர் போலும்
பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே
(11)
பெண்ணுரு ஆணுரு அல்லாப் பிரமபுர நகர் மேய
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள்
விண்ணவரோடினிதாக வீற்றிருப்பார் அவர் தாமே

 

திருவலஞ்சுழி – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருவலஞ்சுழி

(1)
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே, இருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை, மணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே
(2)
விண்டொழிந்தன நம்முடை வல்வினை, விரிகடல் வருநஞ்சம்
உண்டிறைஞ்சு வானவர்தமைத் தாங்கிய இறைவனை உலகத்தில்
வண்டு வாழ்குழல் மங்கையொர் பங்கனை வலஞ்சுழி இடமாகக்
கொண்ட நாதன் மெய்த்தொழில்புரி தொண்டரோடு இனிதிருந்தமையாலே
(3)
திருந்தலார்புரம் தீயெழச் செறுவன, விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன, பத்தியில் வருவன, மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்துமாவன, மந்திரமாவன, வலஞ்சுழி இடமாக
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடித்தலம் தானே
(4)
கறைகொள் கண்டத்தர், காய்கதிர் நிறத்தினர், அறத்திற முனிவர்க்கன்று
இறைவர் ஆலிடை நீழலில் இருந்துகந்து இனிதருள் பெருமானார்
மறைகளோதுவர், வருபுனல் வலஞ்சுழி இடமகிழ்ந்து அருங்கானத்து
அறைகழல் சிலம்பார்க்க நின்றாடிய அற்புதம் அறியோமே
(5)
மண்ணர் நீரர் விண் காற்றினர், ஆற்றலாம் எரியுரு, ஒருபாகம்
பெண்ணர், ஆணெனத் தெரிவரும் வடிவினர், பெருங்கடல் பவளம்போல்
வண்ணராகிலும் வலஞ்சுழி பிரிகிலார், பரிபவர் மனம்புக்க
எண்ணராகிலும், எனைப்பல இயம்புவர் இணையடி தொழுவாரே
(6)
ஒருவரால் உவமிப்பதை அரியதோர் மேனியர், மடமாதர்
இருவர் ஆதரிப்பார், பல பூதமும் பேய்களும் அடையாளம்
அருவராததோர் வெண்தலை கைப்பிடித்தகந்தொறும் பலிக்கென்று
வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே, வரிவளை கவர்ந்தாரே
(7)
குன்றியூர்; குடமூக்கிடம்; வலம்புரம்; குலவிய நெய்த்தானம்
என்று இவ்வூர்களிலோம் என்றும் இயம்புவர், இமையவர் பணிகேட்பார்
அன்றி ஊர் தமக்குள்ளன அறிகிலோம், வலஞ்சுழி அரனார்பால்
சென்ற ஊர்தனில் தலைப்படலாம் என்று சேயிழை தளர்வாமே
(8)
குயிலினேர் மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய
கயிலையைப் பிடித்தெடுத்தவன் கதிர்முடி தோளிருபதும் ஊன்றி
மயிலினேரன சாயலோடு அமர்ந்தவன், வலஞ்சுழி எம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர், அல்லவர் காணாரே
(9)
அழலதோம்பிய அலர்மிசை அண்ணலும், அரவணைத் துயின்றானும்
கழலும் சென்னியும் காண்பரிதாயவர், மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர், மகிழ்திரு வலஞ்சுழி வலங்கொடு பாதத்தால்
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே
(10)
அறிவிலாதவன் சமணர்கள் சாக்கியர், தவம்புரிந்து அவம்செய்வார்
நெறியலாதன கூறுவர் மற்றவை தேறல்மின், மாறாநீர்
மறியுலாம் திரைக்காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப்
பிறிவிலாதவர் பெறுகதி பேசிடில் அளவறுப்வொண்ணாதே
(11)
மாதொர் கூறனை, வலஞ்சுழி மருவிய மருந்தினை, வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ்மாலை
ஆதரித்திசை கற்றுவல்லார் சொலக் கேட்டுகந்தவர் தம்மை
வாதியா வினை, மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்தடையாவே

 

திருவலஞ்சுழி – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருவலஞ்சுழி

(1)
விண்டெலா மலர விரைநாறு தண்தேன் விம்மி
வண்டெலாம் நசையால் இசைபாடும் வலஞ்சுழித்
தொண்டெலாம் பரவும் சுடர்போல் ஒளியீர் சொலீர்
பண்டெலாம் பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே
(2)
பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும்
வாரல் வெண்திரை வாயிரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண்முறுவல் நகு மொய்யொளியீர் சொலீர்
ஊரல் வெண்தலை கொண்டுலகு ஒக்க உழன்றதே
(3)
கிண்ண வண்ண மலரும்கிளர் தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டு மெய்பூச வல்லீர் சொலீர்
விண்ணவர்தொழ வெண்தலையில் பலி கொண்டதே
(4)
கோடெலா நிறையக் குவளைம் மலரும்குழி
மாடெலாம் மலிநீர் மணநாறும் வலஞ்சுழிச்
சேடெலாம் உடையீர், சிறு மான்மறியீர் சொலீர்
நாடெலாம் அறியத் தலையில் நறவேற்றதே
(5)
கொல்லை வென்ற புனத்தில் குருமாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
முல்லை வெண்முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர்
சில்லை வெண்தலையில் பலி கொண்டுழல் செல்வமே
(6)
பூசநீர் பொழியும் புனல் பொன்னியில் பன்மலர்
வாசநீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழித்
தேச நீர், திரு நீர், சிறுமான் மறியீர் சொலீர்
ஏச வெண்தலையில் பலி கொள்வது இலாமையே
(7)
கந்த மாமலர்ச் சந்தொடு காரகிலும் தழீஇ
வந்தநீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்தம் நீர், முதல் நீர், நடுவாம் அடிகேள் சொலீர்
பந்தம் நீர் கருதாது உலகில் பலி கொள்வதே
(8)
தேனுற்ற நறு மாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற்ற நசையால் இசைபாடும் வலஞ்சுழிக்
கானுற்ற களிற்றின் உ ரி போர்க்கவல்லீர் சொலீர்
ஊனுற்ற தலை கொண்டுலகு ஒக்க உழன்றதே
(9)
தீர்த்தநீர் வந்திழி புனல் பொன்னியில் பன்மலர்
வார்த்தநீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை அன்றடர்த்தீர் சொலீர்
சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே
(10)
உரமனும் சடையீர், விடையீர், உமதின்னருள்
வரமனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழிப்
பிரமனும் திருமாலும் அளப்பரியீர் சொலீர்
சிரமெனும் கலனில் பலி வேண்டிய செல்வமே
(11)
வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால்
வாடின் ஞானமென்னாவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டிசை
பாடும் ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே

 

திருவலஞ்சுழி – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருவலஞ்சுழி

(1)
பள்ளமதாய படர்சடை மேல் பயிலும் திரைக்கங்கை
வெள்ளமதார விரும்பி நின்ற விகிர்தன், விடையேறும்
வள்ளல், வலஞ்சுழி வாணனென்று மருவி நினைந்தேத்தி
உள்ளம்உருக உணருமின்கள் உறுநோய் அடையாவே
(2)
காரணி வெள்ளை மதியம்சூடிக் கமழ்புன் சடைதன்மேல்
தாரணி கொன்றையுந் தண்ணெருக்கும் தழைய நுழைவித்து
வாரணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டுகந்த உவகை அறியோமே
(3)
பொன்னியலும் திருமேனி தன்மேல் புரிநூல் பொலிவித்து
மின்னியலும் சடைதாழ, வேழவுரி போர்த்தரவாட
மன்னிய மாமறையோர்கள் போற்றும் வலஞ்சுழி வாணர் தம்மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்குயர்வாம் பிணிபோமே
(4)
விடையொரு பால், ஒரு பால்விரும்பு மெல்லியல் புல்கியதோர்
சடையொரு பால், ஒரு பால் இடங்கொள் தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பால், ஒரு பால் சிலம்பு, நாளும் வலஞ்சுழி சேர்
அடையொரு பால் அடையாத செய்யும் செய்கை அறியோமே
(5)
கையமரும் மழுநாகம் வீணை கலைமான் மறியேந்தி
மெய்யமரும் பொடிப்பூசி வீசும் குழையார் தருதோடும்
பையமரும் அரவாட ஆடும் படர் சடையார்க்கிடமாம்
மையமரும் பொழில்சூழும் வேலி வலஞ்சுழி மாநகரே
(6)
தண்டொடு சூலம் தழையஏந்தித் தையலொரு பாகம்
கண்டிடு பெய்பலி பேணி நாணார், கரியின் உரி தோலர்
வண்டிடு மொய்பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்து நின்ற தொடர்பைத் தொடர்வோமே
(7)
கல்லியலும் மலை அங்கை நீங்க வளைத்து, வளையாதார்
சொல்லியலும் மதில்மூன்றும் செற்ற சுடரான், இடர் நீங்க
மல்லியலும் திரள்தோள் எம்ஆதி வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கியேத்தி இருப்பவர் புண்ணியரே
(8)
வெஞ்சின வாளரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள்
அஞ்சுமொர் ஆறிரு நான்குமொன்றும் அடர்த்தார், அழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதர் என்று நணுகும் இடம் போலும்
மஞ்சுலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மாநகரே
(9)
ஏடிய நான்முகன், சீர்நெடுமால் என நின்றவர் காணார்
கூடிய கூரெரியாய் நிமிர்ந்த குழகர், உலகேத்த
வாடிய வெண்தலை கையிலேந்தி, வலஞ்சுழி மேய எம்மான்
பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே
(10)
குண்டரும் புத்தரும் கூறையின்றிக் குழுவார் உரைநீத்துத்
தொண்டரும் தன்தொழில் பேணநின்ற கழலான் அழலாடி
வண்டமரும் பொழில் மல்குபொன்னி வலஞ்சுழி வாணன் எம்மான்
பண்டொரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே
(11)
வாழி எம்மான் எனக்கு எந்தைமேய வலஞ்சுழி மாநகர்மேல்
காழியுண் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ்மாலை
ஆழிஇவ் வையகத்தேத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும்
ஊழியொரு பெரும் இன்பமோக்கும், உருவும் உயர்வாமே

 

திருவலஞ்சுழி – அப்பர் தேவாரம் (2):

<– திருவலஞ்சுழி

அலையார் புனல்கங்கை நங்கை காண
    அம்பலத்தில் அருநட்டமாடி, வேடம்
தொலையாத வென்றியார் நின்றியூரும்
    நெடுங்களமும் மேவி விடையை மேல்கொண்டு
இலையார்படை கையிலேந்தி எங்கும்
    இமையவரும் உமையவளும் இறைஞ்சியேத்த
மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த
    வலஞ்சுழியே புக்கிடமா மருவினாரே

 

திருவலஞ்சுழி – அப்பர் தேவாரம் (1):

<– திருவலஞ்சுழி

(1)
ஓதமார் கடலின் விடமுண்டவன்
பூத நாயகன், பொற் கயிலைக்கிறை
மாதொர் பாகன், வலஞ்சுழி ஈசனைப்
பாதமேத்தப் பறையும்நம் பாவமே
(2)
கயிலை நாதன், கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன்
மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனைப்
பயில்கிலார் சிலர் பாவித் தொழும்பரே
(3)
இளைய காலம் எம்மானை அடைகிலாத்
துளையிலாச் செவித் தொண்டர்காள், நும்முடல்
வளையும் காலம் வலஞ்சுழி ஈசனைக்
களைகணாகக் கருதிநீர் உய்ம்மினே
(4)
நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க்
குறைவிலாக் கொடும் கூற்றுதைத்திட்டவன்
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவனை இனி என்றுகொல் காண்பதே
(5)
விண்டவர் புர மூன்றும் எரிகொளத்
திண்திறல் சிலையால்எரி செய்தவன்
வண்டு பண்முரலும் தண் வலஞ்சுழி
அண்டனுக்கு அடிமைத் திறத்தாவனே
(6)
படங்கொள் பாம்பொடு பால்மதியம் சடை
அடங்க வாழவல்லான், உம்பர் தம்பிரான்
மடந்தை பாகன், வலஞ்சுழியான் அடி
அடைந்தவர்க்கு அடிமைத் திறத்தாவனே
(7)
நாக்கொண்டு பரவும் அடியார் வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்
மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்தன்
ஏக்கொளப் புரமூன்று எரியானவே
(8)
தேடுவார் பிரமன் திருமாலவர்
ஆடு பாதம் அவரும் அறிகிலார்
மாடவீதி வலஞ்சுழி ஈசனைத்
தேடுவான் உறுகின்றதென் சிந்தையே
(9)
கண் பனிக்கும், கைகூப்பும், கண் மூன்றுடை
நண்பனுக்கெனை நான் கொடுப்பேன் எனும்
வண்பொன்னித் தென்வலஞ்சுழி மேவிய
பண்பன் இப்பொனைச் செய்த பரிசிதே
(10)
இலங்கை வேந்தன் இருபது தோளிற
நலங்கொள் பாதத்தொரு விரல் ஊன்றினான்
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள்வார் அடியென்தலை மேலவே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page