திலதைப்பதி:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகளாரத் தொழுதேத்த நின்ற அழகன் இடம்
கொடிகள்ஓங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள் சோலைம் மலர் மணம்கமழும் மதிமுத்தமே
(2)
தொண்டர் மிண்டிப் புகைவிம்மு சாந்தும்கமழ் துணையலும்
கொண்டு கண்டார் குறிப்புணர நின்ற குழகன் இடம்
தெண்திரைப் பூம்புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டு கெண்டுற்று இசைபயிலும் சோலைம் மதிமுத்தமே
(3)
அடலுள்ஏறு உய்த்துகந்தான், அடியார் அமரர்தொழக்
கடலுள் நஞ்சமுதாக உண்ட கடவுள் இடம்
திடலடங்கச் செழும்கழனி சூழ்ந்த திலதைப்பதி
மடலுள் வாழைக்கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே
(4)
கங்கை திங்கள் வன்னிதுன் எருக்கின்னொடு கூவிளம்
வெங்கண் நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன் இடம்
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்தழகார் மதிமுத்தமே
(5)
புரவியேழும் மணிபூண்டு இயங்கும் கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர்
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கை சுர புன்னைகள்
மரவ மவ்வல் மலரும் திலதைம் மதிமுத்தமே
(6)
விண்ணர் வேதம் விரித்தோத வல்லார், ஒருபாகமும்
பெண்ணர், எண்ணார் எயில் செற்றுகந்த பெருமான் இடம்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதைப்பதி
மண்ணுளார் வந்தருள் பேண நின்றம் மதிமுத்தமே
(7)
ஆறுசூடி அடையார்புரம் செற்றவர், பொற்றொடி
கூறுசேரும் உருவர்க்கிடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில் சூழ்ந்தழகார் திலதைப்பதி
மாறிலாவண் புனல்அரிசில் சூழ்ந்தம் மதிமுத்தமே
(8)
கடுத்துவந்த கனல் மேனியினான், கருவரை தனை
எடுத்தவன் தன் முடிதோள் அடர்த்தார்க்கிடமாவது
புடைக்கொள் பூகத்திளம் பாளை புல்கும் மதுப்பாய வாய்
மடுத்து மந்தி உகளும் திலதைம் மதிமுத்தமே
(9)
படங்கொள் நாகத்தணையானும், பைந்தாமரையின் மிசை
இடங்கொள் நால்வேதனும் ஏத்த நின்ற இறைவன் இடம்
திடங்கொள் நாவின் இசை தொண்டர் பாடும் திலதைப்பதி
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே
(10)
புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப்
பித்தர் சொன்னம் மொழி கேட்கிலாத பெருமான்இடம்
பத்தர் சித்தர் பணிவுற்றிறைஞ்சும் திலதைப்பதி
மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே
(11)
மந்தமாரும் பொழில் சூழ்திலதைம் மதிமுத்தர் மேல்
கந்தமாரும் கடற்காழி உள்ளான் !தமிழ்ஞானசம்
பந்தன்மாலை பழிதீர நின்றேத்த வல்லார்கள் போய்ச்
சிந்தை செய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே

 

திரிசிராப்பள்ளி – சம்பந்தர் தேவாரம்:

<– திரிசிராப்பள்ளி

(1)
நன்றுடையானைத் தீயதிலானை, நரைவெள்ளேறு
ஒன்றுடையானை, உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச், சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்உள்ளம் குளிரும்மே
(2)
கைம்மகவேந்திக் கடுவனொடு ஊடிக் கழைபாய்வான்
செம்முக மந்தி கருவரையேறும் சிராப்பள்ளி
வெம்முக வேழத்து ஈருரி போர்த்த விகிர்தா, நீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே
(3)
மந்தம் முழவம் மழலை ததும்ப வரைநீழல்
செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடையூரும்
எந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே
(4)
துறைமல்கு சாரல், சுனைமல்கு நீலத்து இடைவைகிச்
சிறைமல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்
கறைமல்கு கண்டன், கனலெரியாடும் கடவுள்எம்
பிறைமல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே
(5)
கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனும் சிராப்பள்ளித்
தலைவரைநாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரைநீலம் உண்டதும் வெள்ளை நிறமாமே
(6)
வெய்ய தண்சாரல் விரிநிற வேங்கைத் தண்போது
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர் பாகம் மகிழ்வர், நஞ்சுண்பர், தலையோட்டில்
ஐயமும் கொள்வர், ஆரிவர் செய்கை அறிவாரே
(7)
வேயுயர் சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற்று ஆகாதே
(8)
மலைமல்கு தோளன் வலிகெட ஊன்றி, மலரோன்தன்
தலை கலனாகப் பலிதிரிந்து உண்பர், பழியோரார்
சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சிலவல போலும் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே
(9)
அரப்பள்ளியானும், மலர் உறைவானும் அறியாமைக்
கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனும், கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீர், உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே
(10)
நாணாது உடை நீத்தோர்களும், கஞ்சி நாள் காலை
ஊணாப் பகலுண்டோதுவோர்கள் உரைக்கும் சொல்
பேணாது உறுசீர் பெறுதும் என்பீர், எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே
(11)
தேன்நயம் பாடும் சிராப்பள்ளியானைத், திரைசூழ்ந்த
கானல் சங்கேறும் கழுமலஊரில் கவுணியன்
ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவைவல்லார்
வான சம்பந்தத்தவரொடு மன்னி வாழ்வாரே

 

திருநறையூர்ச் சித்தீச்சரம் – சுந்தரர் தேவாரம்:

 

திருநறையூர்ச் சித்தீச்சரம்

(1)
நீரும் மலரும் நிலவும் சடைமேல்
ஊரும் அரவும் உடையான் இடமாம்
வாரும் அருவி மணிபொன் கொழித்துச்
சேரும் நறையூர்ச் சித்தீச்சரமே
(2)
அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்
வளைக்கை மடவார் மடுவில் தடநீர்த்
திளைக்கும் நறையூர்ச் சித்தீச்சரமே
(3)
இகழும் தகையோர் எயில் மூன்றெரித்த
பகழியொடு வில் உடையோன் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலம்
திகழும் நறையூர்ச் சித்தீச்சரமே
(4)
மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்
நறக்கொள் கமலம் நனிபள்ளிஎழத்
திறக்கும் நறையூர்ச் சித்தீச்சரமே
(5)
முழுநீறணி மேனியன், மொய் குழலார்
எழுநீர்மை கொள்வான் அமரும் இடமாம்
கழுநீர் கமழக் கயல்சேல் உகளும்
செழுநீர் நறையூர்ச் சித்தீச்சரமே
(6)
ஊனாருடை வெண்தலைஉண் பலிகொண்டு
ஆனார் அடலேறமர்வான் இடமாம்
வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த்
தேனார் நறையூர்ச் சித்தீச்சரமே
(7)
காரூர் கடலில் விடம் உண்டருள் செய்
நீரூர் சடையன் நிலவும் இடமாம்
வாரூர் முலையார் மருவும் மறுகில்
தேரூர் நறையூர்ச் சித்தீச்சரமே
(8)
கரியின் உரியும் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடமாம்
புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்
தெரியும் நறையூர்ச் சித்தீச்சரமே
(9)
பேணா முனிவான் பெருவேள்வியெலாம்
மாணாமை செய்தான் மருவும் இடமாம்
பாணார் குழலும் முழவும் விழவில்
சேணார் நறையூர்ச் சித்தீச்சரமே
(10)
குறியில் வழுவாக் கொடுங்கூற்றுதைத்த
எறியும் மழுவாள் படையான் இடமாம்
நெறியில் வழுவா நியமத்தவர்கள்
செறியும் நறையூர்ச் சித்தீச்சரமே
(11)
போரார் புரம்எய் புனிதன் அமரும்
சீரார் நறையூர்ச் சித்தீச்சரத்தை
ஆரூரன்சொல் இவை வல்லவர்கள்
ஏரார் இமையோர் உலகெய்துவரே

 

திருவிடைமருதூர் – சம்பந்தர் தேவாரம் (6):

<– திருவிடைமருதூர்

(1)
தோடொர் காதினன் பாடு மறையினன்
காடு பேணி நின்றாடு மருதனே
(2)
கருதார் புரமெய்வர் எருதே இனிதூர்வர்
மருதே இடமாகும் விருதாம் வினைதீர்ப்பே
(3)
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரைப்
பண்ணின் மொழிசொல்ல விண்ணும் தமதாமே
(4)
விரியார் சடைமேனி எரியார் மருதரைத்
தரியாதேத்துவார் பெரியார் உலகிலே
(5)
பந்த விடையேறும் எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே
(6)
கழலும் சிலம்பார்க்கும் எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க்குழலும் வினைபோமே
(7)
பிறையார் சடைஅண்ணல் மறையார் மருதரை
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே
(8)
எடுத்தான் புயந்தன்னை அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட விடுத்தார் வேட்கையே
(9)
இருவர்க்கெரியாய உருவ மருதரைப்
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே
(10)
நின்றுண் சமண்தேரர் என்று மருதரை
அன்றி உரைசொல்ல நன்று மொழியாரே
(11)
கருது சம்பந்தன் மருதர் அடிபாடிப்
பெரிதும் தமிழ்சொல்லப் பொருத வினைபோமே

 

கோட்டாறு – சம்பந்தர் தேவாரம் (2):

<– கோட்டாறு

(1)
வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான், விளங்கும் மறை
ஓதிய ஒண்பொருளாகி நின்றான், ஒளியார் கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்தழகார் திருக்கோட்டாற்றுள்
ஆதியையே நினைந்தேத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே
(2)
ஏலமலர்க்குழல் மங்கை நல்லாள் இமவான் மகள்
பாலமரும் திருமேனி எங்கள் பரமேட்டியும்
கோலமலர்ப் பொழில் சூழ்ந்து எழிலார் திருக்கோட்டாற்றுள்
ஆலநீழற்கீழ் இருந்துஅறம் சொன்ன அழகனே
(3)
இலைமல்கு சூலமொன்று ஏந்தினானும், இமிமையோர் தொழ
மலைமல்கு மங்கையோர் பங்கனாய் அம்மணிகண்டனும்
குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழகார் திருக்கோட்டாற்றுள்
அலைமல்கு வார்சடை ஏற்றுகந்த அழகனன்றே
(4)
ஊனமரும் உடலுள் இருந்த உமைபங்கனும்
வானமரும் மதி சென்னிவைத்த மறையோதியும்
தேனமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
தானமரும் விடையானும் எங்கள் தலைவனன்றே
(5)
வம்பலரும் மலர்க்கோதை பாகம்மகிழ் மைந்தனும்
செம்பவளத் திருமேனி வெண்ணீறணி செல்வனும்
கொம்பமரும் மலர் வண்டு கெண்டும் திருக்கோட்டாற்றுள்
நம்பன்எனப் பணிவார்க்கருள் செய் எங்கள் நாதனே
(6)
பந்தமரும் விரல் மங்கை நல்லாள்ஒரு பாகமா
வெந்தமரும் பொடிப் பூசவல்ல விகிர்தன், மிகும்
கொந்தமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அந்தணனை நினைந்தேத்த வல்லார்க்கில்லை அல்லலே
(7)
துண்டமரும் பிறைசூடி நீடுசுடர் வண்ணனும்
வண்டமரும் குழல் மங்கை நல்லாள்ஒரு பங்கனும்
தெண்திரை நீர்வயல் சூழ்ந்தழகார் திருக்கோட்டாற்றுள்
அண்டமும் எண்திசையாகி நின்ற அழகனன்றே
(8)
இரவமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கிறை
கரவமரக் கயிலையெடுத்தான் வலி செற்றவன்
குரவமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அரவமரும் சடையான் அடியார்க்கருள் செய்யுமே
(9)
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணராவகை
நீங்கிய தீயுருவாகி நின்ற நிமலன், நீழல்
கோங்கமரும் பொழில் சூழ்ந்தெழிலார் திருக்கோட்டாற்றுள்
ஆங்கமரும் பெருமான் அமரர்க்கு அமரனன்றே
(10)
கடுக்கொடுத்த துவராடையர் காட்சி இல்லாததோர்
தடுக்கிடுக்கிச் சமணே திரிவார்கட்குத் தன்னருள்
கொடுக்ககில்லாக் குழகன் அமரும் திருக்கோட்டாற்றுள்
இடுக்கணின்றித் தொழுவார் அமரர்க்கு இறையாவரே
(11)
கொடியுயர் மால்விடை ஊர்தியினான் திருக்கோட்டாற்றுள்
அடிகழல் ஆர்க்க நின்றாடவல்ல அருளாளனைக்
கடிகமழும் பொழில் காழியுண் ஞானசம்பந்தன் சொல்
படியிவை பாடி நின்றாட வல்லார்க்கில்லை பாவமே

 

கோட்டாறு – சம்பந்தர் தேவாரம் (1):

<– கோட்டாறு

(1)
கருந்தடம் கண்ணின் மாதரார்இசை செய்யக் காரதிர்கின்ற பூம்பொழில்
குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெருமானை உள்கி இணையடி தொழுதேத்தும் மாந்தர்கள்
வருந்துமாறறியார் நெறிசேர்வர் வானூடே
(2)
நின்று மேய்ந்து நினைந்து மாகரி நீரொடும் மலர் வேண்டி வான்மழை
குன்றின்நேர்ந்து குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பிரான் கழல்ஏத்தி வான்அரசாள வல்லவர்
பொன்றுமாறு அறியார் புகழார்ந்த புண்ணியரே
(3)
விரவி நாளும் விழா விடைப்பொலி தொண்டர் வந்து வியந்து பண்செயக்
குரவமாரும் நீழற்பொழில் மல்கு கோட்டாற்றில்
அரவ நீள்சடையானை உள்கி நின்றாதரித்து முன்அன்பு செய்தடி
பரவுமாறு வல்லார் பழி பற்றறுப்பாரே
(4)
அம்பினேர்விழி மங்கைமார் பலர் ஆடகம்பெறு மாட மாளிகைக்
கொம்பினேர் துகிலின் கொடியாடு கோட்டாற்றில்
நம்பனே நடனே நலந்திகழ் நாதனே என்று காதல் செய்தவர்
தம் பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே
(5)
பழைய தம்அடியார் துதி செயப், பாருளோர்களும் விண்ணுளோர் தொழக்
குழலு மொந்தை விழாவொலி செய்யும் கோட்டாற்றில்
கழலும் வண்சிலம்பும் ஒலிசெயக் கானிடைக் கணமேத்த ஆடிய
அழகன் என்றெழுவார் அணியாவர் வானவர்க்கே
(6)
பஞ்சின் மெல்லடி மாதர், ஆடவர், பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும்
கொஞ்சி இன்மொழியால் தொழில்மல்கு கோட்டாற்றில்
மஞ்சனே மணியே மணிமிடற்றண்ணலே என உள்நெகிழ்ந்தவர்
துஞ்சுமாறறியார், பிறவார் இத்தொல்நிலத்தே
(7)
கலவ மாமயிலாள்ஓர் பங்கனைக் கண்டு, கண்மிசை நீர் நெகிழ்த்து, இசை
குலவுமாறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவு மாமதிசேர் சடையுடை நின்மலா என உன்னுவார்அவர்
உலவு வானவரின் உயர்வாகுவது உண்மையதே
(8)
வண்டலார் வயல் சாலிஆலை வளம் பொலிந்திட வார்புனல்திரை
கொண்டலார் கொணர்ந்தங்குலவும் திகழ் கோட்டாற்றில்
தொண்டெலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே, கழலால் அரக்கனை
மிண்டெலாம் தவிர்த்தென் உகந்திட்ட வெற்றிமையே
(9)
கருதிவந்து அடியார் தொழுதெழக், கண்ணனோடுஅயன் தேட, ஆனையின்
குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்
விருதினால் மடமாது நீயும் வியப்பொடும் உயர்கோயில் மேவிவெள்
எருதுகந்தவனே இரங்காய் உனது இன்னருளே
(10)
உடையிலாதுழல்கின்ற குண்டரும், ஊணரும், தவத்தாய சாக்கியர்
கொடையிலா மனத்தார் குறையாரும் கோட்டாற்றில்
படையிலார் மழுவேந்தி ஆடிய பண்பனே, இவரென் கொலோ நுனை
அடைகிலாத வண்ணம், அருளாய் உன் அடியவர்க்கே
(11)
காலனைக் கழலால் உதைத்தொரு காமனைக் கனலாகச் சீறிமெய்
கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்
மூலனை, முடிவொன்றிலாத எம் முத்தனைப் பயில் பந்தன் சொல்லிய
மாலை பத்தும் வல்லார்க்கெளிதாகும் வானகமே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page